ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மேலும் ஒருவர் காயம்; நியூசிலாந்து அணியுடன் இணையும் பிரபல வேகப் பந்துவீச்சாளர்!

நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்றிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் வேகப் பந்துவீச்சாளார் கைல் ஜேமிசன் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :2 நவம்பர் 2023, 10:14 am

DIN

நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்றிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் வேகப் பந்துவீச்சாளார் கைல் ஜேமிசன் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணியின்  கேப்டன் கேன் வில்லியம்சன், லாகி பெர்க்யூசன் மற்றும் மார்க் சேப்மேன்  ஆகியோர் காயம் காரணமாக பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அந்த வரிசையில் தற்போது மாட் ஹென்றி மற்றும் ஜேம்ஸ் நீஷம் இணைந்துள்ளனர். நியூசிலாந்து அணிக்காக மாட் ஹென்றி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு தற்போது காயம் ஏற்பட்டுள்ளதால் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் அவர் நியூசிலாந்து பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறியதாவது: மாட் ஹென்றிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது சந்தேகம். அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. ஸ்கேன் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். ஒருநாள் போட்டிகளில் மாட் ஹென்றி நியூசிலாந்து அணிக்காக சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். நியூசிலாந்து அணியின் கைல் ஜேமிசன் தயாராக இருக்கிறார். அவர் நியூசிலாந்து அணியுடன் இணைய உள்ளார். அவர் நாளை மறுநாள் (நவம்பர் 4) நடைபெறும் போட்டிக்கு அணியில் இணைவதற்கு தயாராக இருப்பார் என்றார்.

Story image

இந்த உலகக் கோப்பைத் தொடரில் முதல் 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்ற நியூசிலாந்து அணி கடந்த 3 போட்டிகளில் தோல்விகளை சந்தித்துள்ளது. இதன்மூலம்,  8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து 4-வது இடத்தில் உள்ளது.

நாளை மறுநாள் (நவம்பர் 4) பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து பாகிஸ்தானை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.