உலகக் கோப்பை லீக் போட்டியின் 35வது ஆட்டத்தில் பாகிஸ்தான் -நியூ. மோதுகின்றன. கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையில் பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது பாகிஸ்தான் அணி.
உஸாமா மிர்-க்கு பதிலாக இந்தப் போட்டியில் ஹசன் அலி களமிறங்கினார். நியூசிலாந்தின் தொடக்க வீரர் கான்வேயின் விக்கெட்டினை 10.5வது ஓவரில் எடுத்தார் ஹசன் அலி. இந்த விக்கெட்டின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இதையும் படிக்க: உலகக் கோப்பை தொடரிலிருந்து ஹார்திக் பாண்டியா விலகல்!

2016இல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ஹசன் அலி 24 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் 13 விக்கெட்டுகளை எடுத்து அந்தத் தொடரிலேயே அதிக விக்கெட்டுகள் எடுத்த பௌலர் ஆனார் ஹசன் அலி.
66 போட்டிகளில் 38 இன்னிங்ஸில் 100 விக்கெட்டுகளை எடுத்து புதிய சாதனை படைத்த ஹசன் அலி இந்த உலகக் கோப்பையில் இடம்பெறுவாரா என்பது சந்தேகமாக இருந்தது. நஷீம் ஷா காயம் காரணமாக வெளியேற திடீரென அணியில் இடம்பிடித்தார் ஹசன் அலி.

6வது பாகிஸ்தான் வீரர்
வேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்த பாகிஸ்தான் வீரர்கள் பட்டியலில் 6வது இடத்தினை பிடித்துள்ளார் ஹசன் அலி. ஷாஹீன் அப்ரிடி (51), முஷ்டக் (53), வாக்கர் யூனிஸ் (59), சொயிப் அக்தர் (60), நவித் உல் ஹசன் (65) வரிசையில் 6வது இடம் பிடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எரிபொருள் விலை உயர்வால் கேரளத்தில் பணவீக்கம் அதிகரிப்பு: முதல்வர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி, ஒருநாள் தொடருக்கான ஆப்கன் அணி அறிவிப்பு!

விருதுநகரில் 23 கல்குவாரிகளை மூட உத்தரவு! தென்காசியில் நேற்று 18!

ஜே.கே டயர் Q4 நிகர லாபம் 80% உயர்வு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



