8 வீரர்களை விடுவித்த சிஎஸ்கே அணி! 

நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணி தனது அணியில் இருந்து 8 வீரர்களை விடுவித்துள்ளது. 
படம்: சிஎஸ்கே | எக்ஸ்
படம்: சிஎஸ்கே | எக்ஸ்

எம்.எஸ். தோனி தலைமையில் செயல்பட்டு வரும் சிஎஸ்கே (சென்னை சூப்பர் கிங்ஸ்) அணி  ஐபிஎல் போட்டிகளில் மிகவும் முக்கியமான அணி. அதிகம் முறை (12) ப்ளே- ஆஃப்க்கு தேர்வான அணியாக சிஎஸ்கே இருக்கிறது. மேலும் நடப்பு சாம்பினான சிஎஸ்கே, மும்பை இந்தியனஸ் அணி இதுவரை தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இன்றோடு ஐபிஎல் அணிகள் தங்களுக்கான தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும். மேலும் யார் யாரை அணியில் இருந்து விடுவித்துள்ளது குறித்தும் பட்டியலை தர வேண்டும். 

இந்நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் 8 வீரர்களை விடுவித்துள்ளது. அம்பத்தி ராயுடு (ரூ.6.7 கோடி), கைல் ஜேமிசன் (ரூ.1 கோடி), சிசாண்டா மலாகா (ரூ.50 இலட்சம்), ஆகாஷ் சிங் (ரூ.20 இலட்சம்), பென் ஸ்டோக்ஸ் (ரூ.16.2 கோடி), டுவைன் பிரிடோரியஸ் (ரூ.50 இலட்சம்), பகவத் வர்மா (ரூ.20 இலட்சம்), சுப்ரன்சு சேனாபதி (ரூ.20 இலட்சம்). 

இதன்மூலம் ரூ.32.1 கோடி ரூபாய் சிஎஸ்கேவிடம் மீதமிருக்கிறது.  6 இடங்களுக்கான வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். இதில் 3 வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம். 

அடுத்தாண்டுக்கான மினி ஏலம் வரும் டிச.19ஆம் தேதி துபையில் நடைபெறுகிறது. இதன் நேரலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com