ஆசிய விளையாட்டுப் போட்டியின் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றது.
19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்ஸு நகரில் செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்றைய போட்டியில் இந்தியா ஸ்கேட்டிங்கில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
இதையும் படிக்க | ஆசிய விளையாட்டுப் போட்டி: ஸ்கேட்டிங்கில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்!
தொடர்ந்து ஆசிய விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் முதல்முறையாக இந்தியா பதக்கம் வென்றுள்ளது.
இந்தியாவின் அய்ஹிகா முகர்ஜி மற்றும் சுதிர்தா முகர்ஜி இணை, கொரிய குடியரசு இணையை தோற்கடித்து வெண்கலம் வென்றுள்ளது.
இந்தியா 56 பதக்கங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.