அடுத்தடுத்த சதங்களால் டி-காக் படைத்த சாதனைகள்!

அடுத்தடுத்த சதங்களால் டி-காக் படைத்த சாதனைகள்!

தென்னாப்பிரிக்கா வீரர்  டி-காக் தனது அடுத்தடுத்த தொடர் சதங்களால் புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா வீரர்  டி-காக் தனது அடுத்தடுத்த தொடர் சதங்களால் புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.
 
உலகக் கோப்பையின் இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக குயிண்டன் டி-காக் 106 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார். இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் சதம்விளாசிய டி-காக், தொடர்ச்சியாக தனது இரண்டாவது சதத்தை இன்று பதிவு செய்துள்ளார். அவரது இன்றைய சதத்தின் மூலம் டி-காக்  சில சாதனைகளைப் படைத்துள்ளார்.

அந்த சாதனைகள் பின்வருமாறு:

3-வது வீரர்

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்த மூன்றாவது தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையை டி-காக் படைத்துள்ளார். முன்னதாக, 1999 ஆம் ஆண்டு கிப்ஸும் , 2019 ஆம் ஆண்டு டு பிளெசியும் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

உலகக் கோப்பையில் அதிக சதமடித்த தென்னாப்பிரிக்க வீரர்கள்

ஏபி டி வில்லியர்ஸ் - 4 சதங்கள் 
ஹாசிம் ஆம்லா - 2 சதங்கள்
டு பிளெசிஸ் - 2 சதங்கள்
கிப்ஸ் - 2 சதங்கள்
டி-காக் - 2 சதங்கள் 

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிக சதங்கள் அடித்த தென்னாப்பிரிக்க வீரர்கள்

ஹாசிம் ஆம்லா - 27 சதங்கள் 
டி-காக் - 19 சதங்கள்
கிப்ஸ் - 18 சதங்கள்
கேரி கிறிஸ்டன் - 13 சதங்கள்
கிரெம் ஸ்மித் - 10 சதங்கள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த தென்னாப்பிரிக்க வீரர்கள்

டு பிளெசிஸ் - 5 சதங்கள்
கிப்ஸ் - 3  சதங்கள்
டி-காக் - 3 சதங்கள்

உலகக் கோப்பையில் அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர்கள்

குமார் சங்ககாரா - 5 சதங்கள்
ஏபி டி வில்லியர்ஸ் - 2 சதங்கள்
பிரண்டன் டெய்லர் - 2 சதங்கள்
டி-காக் - 2 சதங்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com