உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

உலகக் கோப்பையில் லக்னௌவில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 7  விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டி காக் 109 ரன்களும், மார்கரம் 56  ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஸாம்பா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். இந்த இணை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. மார்ஷ் 7 ரன்களிலும், டேவிட் வார்னர் 13  ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 19 ரன்களில் ரபாடா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா தரப்பில்  மார்னஸ் லபுஷேன் மற்றும் மிட்செல் ஸ்டார்க் சிறிது போராடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஜோஷ் இங்லிஸ் (5 ரன்கள்), கிளன் மேக்ஸ்வெல் (3 ரன்கள்), மார்கஸ் ஸ்டொய்னிஸ் (5 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். நிதானமாக ஆடிய லபுஷேன் மற்றும் ஸ்டார்க் கூட்டணியை மார்கோ ஜேன்சன் உடைத்தார். மார்கோ ஜேன்சன் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த ஓவரிலேயே கேசவ் மகாராஜ் வீசிய பந்தில் 46 ரன்களில் லபுஷேனும் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால், ஆஸ்திரேலிய அணிக்கான வெற்றி வாய்ப்பு குறைந்தது.

இறுதியில் 40.5 ஓவர்களில் ஆஸ்திரேலியா 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்கா 134 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. தென்னாப்பிரிக்க அணிக்கு இது இரண்டாவது வெற்றியாகும். முதல் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா இன்று தனது இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ககிசோ ரபாடா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மார்கோ ஜேன்சன், ஷம்சி மற்றும் கேசவ் மகாராஜ் தலா 2 விக்கெட்டுகளையும், லுங்கி இங்கிடி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com