
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 270 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
உலகக் கோப்பையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது.
இதையும் படிக்க: 24 ஆண்டுகால தோல்வி.. என்ன செய்யப்போகிறது பாகிஸ்தான்?
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா சஃபீக் மற்றும் இமாம் உல் ஹக் களமிறங்கினர். சஃபீக் 9 ரன்களிலும், இமாம் உல் ஹக் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடியது. இருப்பினும், முகமது ரிஸ்வான் 31 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். நிதானமாக விளையாடிய கேப்டம் பாபர் அசாம் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். சௌத் ஷஹீல் 52 ரன்களும், ஷதாப் கான் 43 ரன்களும் எடுத்து பாகிஸ்தான் அணியின் ஸ்கோரினை உயர்த்தினர்.
இறுதியில் பாகிஸ்ஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 270 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
தென்னாப்பிரிக்கா தரப்பில் ஷம்சி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மார்கோ ஜேன்சன் 3 விக்கெட்டுகளையும், ஜெரால்டு கோட்டீஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.