ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி! 

உலகக் கோப்பையின் 27வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

News image
Updated On :28 அக்டோபர் 2023, 1:39 pm

கடந்த அக்.5ஆம் தேதி முதல் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. லீக் போட்டியின் 27வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது.உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 388/10 ரன்கள் எடுத்துள்ளது. 

அடுத்து ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கான்வே 28 ரன்களுக்கும் வில் யங் 32 ரன்களுக்கும் ஆட்டமிழக்க ரச்சின் ரவீந்திரா பொறுப்புடன் விளையாடி 77 பந்துகளில்  சதமடித்தார். 89 பந்துகளில் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் 9 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் அடங்கும். 

Story image

டேரில் மிட்செல் 54 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்த வந்த டாம் லாதம் (21) பிலிப்ஸ் (12), சான்ட்னர்(17) விரைவிலேயே ஆட்டமிழக்க ஜிம்மி நீஷம் நிலைத்து ஆடி அரைசதமடித்தார்.  

கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவையானபோது ஸ்டார்க் வைட் வீசி பவுண்டரி கொடுக்க ஆட்டம் சூடுபிடித்தது. 5வது பந்தில் நீஷம் ரன்னவுட்  (58 ரன்கள்) ஆனார். கடைசிப் பந்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. த்ரில் வெற்றி பெற்றது. 

ஆஸி. சார்பாக ஜாம்பா 3 விக்கெட்டுகளும் ஹேசில்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

தொடர்ந்து 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. இதுதான் பழைய ஆஸி. அணி ரசிகர்கள் இணையத்தில் புகழ்ந்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.