எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

இந்தியா பேட்டிங்: டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சு தேர்வு! 

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

News image
Updated On :10 செப்டம்பர் 2023, 10:11 am

DIN

6 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கியது. இதில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த பாகிஸ்தான், இந்தியா, இலங்கை வங்கதேசம் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. 

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளார். 

இந்திய அணியில் இரு மாற்றங்கள்: ஜஸ்ப்ரீத் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். ஸ்ரேயஸ் ஐயருக்கு பதிலாக கே.எல்.ராகுல் அணியில் இடம் பிடித்துள்ளார். ஸ்ரேயஸ் ஐயருக்கு முதுகுவலி பிரச்னை என கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். 

இந்திய அணி: ரோஹித், ஷுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா, கே.எல். ராகுல், ஜடேஜா, ஷர்துல் தாக்குர், குல்தீப், பும்ரா, மொஹமது சிராஜ். 

பாகிஸ்தான் அணி நேற்றே தங்களது அணியை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் அணி: பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான், ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், சல்மான் அலி அஹா, இஃப்திகார் அகமது, முகமது ரிஸ்வான், நசிம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, ஹரிஸ் ரவுஃப், பஹீம் அஷ்ரப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.