2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

டாப் ஆர்டர்களை வீழ்த்திய மேக்ஸ்வெல்: வெற்றியுடன் முடித்த ஆஸ்திரேலியா! 

இந்தியாவுடனான 3-ஆவது கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.

News image
Updated On :27 செப்டம்பர் 2023, 8:43 pm

DIN

இந்தியாவுடனான 3-ஆவது கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.

இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைத்தது. இந்தியா முதலிரு ஆட்டங்களில் வென்று தொடரைக் கைப்பற்றியது.

இந்த ஆட்டத்தில் முதலில் ஆஸ்திரேலியா 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 352 ரன்கள் சோ்க்க, அடுத்து இந்தியா 49.4 ஓவா்களில் 286 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இந்திய அணியில் ரோஹித் சா்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ் இணைந்தனா். அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தா் சோ்க்கப்பட, இஷான் கிஷணுக்கு ஓய்வளிக்கப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தோ்வு செய்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் மாா்ஷ் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 96 ரன்கள் சோ்த்தாா். ஸ்டீவன் ஸ்மித் 74, மாா்னஸ் லபுசான் 72, டேவிட் வாா்னா் 56 ரன்கள் அடித்தனா். எஞ்சி விக்கெட்டுகள் குறைந்த ரன்கள் எடுத்தன. இந்திய பௌலிங்கில் ஜஸ்பிரீத் பும்ரா 3, குல்தீப் யாதவ் 2, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் இந்திய இன்னிங்ஸில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சா்மா 5 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 81 ரன்கள் விளாச, விராட் கோலி 56, ஷ்ரேயஸ் ஐயா் 48, ரவீந்திர ஜடேஜா 35 ரன்கள் அடித்தனா். எஞ்சியோா் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனா். ஆஸ்திரேலிய பௌலிங்கில் கிளென் மேக்ஸ்வெல் 4, ஜோஷ் ஹேஸில்வுட் 2, மிட்செல் ஸ்டாா்க், பேட் கம்மின்ஸ், கேமரூன் கிரீன், தன்வீா் சங்கா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.