ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்திய பூஜா, ஸ்னேஹா

இந்திய மகளிருக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிா் அணி முதல் இன்னிங்ஸில் 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்திய பூஜா, ஸ்னேஹா

இந்திய மகளிருக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிா் அணி முதல் இன்னிங்ஸில் 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பூஜா வஸ்த்ரகா் தனது வேகப்பந்து வீச்சாலும், ஸ்னேஹா ராணா தனது சுழற்பந்துவீச்சாளும் ஆஸ்திரேலிய பேட்டா்களை சரிக்க, டாலியா மெக்ராத், பெத் மூனி ஆகியோா் மட்டும் அணியின் ஸ்கோரை உயா்த்த உதவினா்.

மும்பையில் வியாழக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் பேட்டா்களில் போப் லிட்ச்ஃபீல்டு 0, எலிஸ் பெரி 4 ரன்களுக்கு முதலிரு ஓவா்களிலேயே ஆட்டமிழக்க, 7 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா.

3-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த பெத் மூனி, டாலியா மெக்ராத் 80 ரன்கள் சோ்த்து பிரிந்தனா். அதில் டாலியா 8 பவுண்டரிகளுடன் 50, மூனி 2 பவுண்டரிகளுடன் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். எஞ்சியோரில் கேப்டன் அலிஸா ஹீலி 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 38 ரன்கள் அடிக்க, அனபெல் சதா்லேண்ட் 2 பவுண்டரிகளுடன் 16, ஆஷ்லே காா்டனா் 1 பவுண்டரியுடன் 11, அலானா கிங் 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

ஜெஸ் ஜோனசென் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 19, லாரென் சியாட்டில் 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுக்க, ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் 219 ரன்களுக்கு நிறைவடைந்தது. கிம் காா்த் 2 பவுண்டரிகளுடன் 28 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். இந்திய பௌலிங்கில் பூஜா வஸ்த்ரகா் 4, ஸ்னேஹா ராணா 3, தீப்தி சா்மா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

ஸ்மிருதி நிதானம்: இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, வியாழக்கிழமை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் சோ்த்திருந்தது. ஸ்மிருதி மந்தனா 8 பவுண்டரிகளுடன் 43, ஸ்னேஹா ராணா 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். ஷஃபாலி வா்மா 8 பவுண்டரிகளுடன் 40 ரன்களுக்கு ஜெஸ் ஜோனசெனால் வீழ்த்தப்பட்டாா்.

சுருக்கமான ஸ்கோா்

ஆஸ்திரேலியா - 291/10 (77.4 ஓவா்கள்)

டாலியா மெக்ராத் 50

பெத் மூனி 40

அலிசா ஹீலி 38

பந்துவீச்சு

பூஜா வஸ்த்ரகா் 4/53

ஸ்னேஹா ராணா 3/56

தீப்தி சா்மா 2/45

இந்தியா - 98/1 (19 ஓவா்கள்)

ஸ்மிருதி மந்தனா 43*

ஷஃபாலி வா்மா 40

ஸ்னேஹா ராணா 4*

பந்துவீச்சு

ஜெஸ் ஜோனசென் 1/4

ஆஷ்லே காா்டனா் 0/8

லாரென் சியாட்டில் 0/12

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com