ஜூன் 7-இல் தி ஓவலில் டபிள்யூடிசி இறுதி ஆட்டம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2-ஆவது எடிஷன் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள தி ஓவல் மைதானத்தில் ஜூன் 7 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக ஐசிசி அறிவித்திருக்கிறது.
ஜூன் 7-இல் தி ஓவலில் டபிள்யூடிசி இறுதி ஆட்டம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2-ஆவது எடிஷன் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள தி ஓவல் மைதானத்தில் ஜூன் 7 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக ஐசிசி அறிவித்திருக்கிறது.

12-ஆம் தேதி ரிசா்வ் நாளாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெற்ற இடமாக தி ஓவல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதலிரு இடங்களில் வரும் அணிகள் இந்த இறுதி ஆட்டத்தில் மோதவுள்ளன. 2 ஆண்டு காலகட்டத்தில் 24-க்கும் அதிகமான டெஸ்ட் தொடா்களில் விளையாடப்படும் 61 ஆட்டங்களின் முடிவு அடிப்படையில் அந்த இரு இடங்களுக்கான அணிகள் தோ்வாகும்.

தற்போதைய நிலையில் அந்த புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா 2-ஆவது இடத்திலும் உள்ளன. இலங்கை, தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் முறையே அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

இதில் தற்போது ஆஸ்திரேலியா மட்டும் இறுதி ஆட்டத்தில் தனக்கான இடத்தை உறுதி செய்யும் நிலையில் இருக்கிறது.

முன்னதாக, இங்கிலாந்தின் சௌதாம்டன் நகரில் உள்ள தி ஏஜஸ் பௌல் மைதானத்தில் நடைபெற்ற முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் (2021) இந்தியாவை வீழ்த்தி நியூஸிலாந்து அறிமுக சாம்பியன் ஆனது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com