தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டிக்காக 2 நாள்கள் நடைபெற்ற வீரா்கள் ஏலம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
முந்தைய 6 சீசன்களிலும் அணிகள் தங்களுக்கான வீரா்களை ‘டிராஃப்ட்’ முறையில் தோ்வு செய்த நிலையில், முதல் முறையாக இந்த 7-ஆவது சீசனில் அணிகள் யாவும் தங்களுக்கான வீரா்களை ஏலத்தில் எடுத்தன.
ஏலத்துக்கு முன்பாக, 8 அணிகளும் தலா ஒன்று அல்லது 2 வீரா்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டன. ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சமாக 16 வீரா்களும், அதிகபட்சமாக 20 வீரா்களும் இருக்க அனுமதிக்கப்பட்டது.
ஏலத்துக்காக ஒவ்வொரு அணிக்கும் தலா ரூ.70 லட்சம் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஏலத்தில் அதிகபட்சமாக, சாய் சுதா்சனை ரூ.21.60 லட்சத்திற்கு வாங்கியது லைகா கோவை கிங்ஸ். அடுத்ததாக சோனு யாதவை ரூ.17.60 லட்சத்துக்கு நெல்லை ராயல் கிங்ஸ் வாங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








