வசமானது பார்டர் - காவஸ்கர் தொடர்

பார்டர் ' காவஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியா ' ஆஸ்திரேலியா மோதிய 4'ஆவது ஆட்டம் திங்கள்கிழமை "டிரா''வில் முடிந்தது. 
வசமானது பார்டர் - காவஸ்கர் தொடர்

பார்டர் ' காவஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியா ' ஆஸ்திரேலியா மோதிய 4'ஆவது ஆட்டம் திங்கள்கிழமை "டிரா''வில் முடிந்தது. 

அதில் 2'ஆவது இன்னிங்ûஸ ஆடி வந்த ஆஸ்திரேலியா, கடைசி நாளில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்து 84 ரன்கள் முன்னிலையில் இருந்தபோது, ஆட்டத்தை டிரா செய்துகொள்ள இரு அணிகளும் ஒப்புக் கொண்டன. 

186 ரன்கள் விளாசிய விராட் கோலி ஆட்டநாயகனாகவும், தொடர் முழுவதுமாக 86 ரன்கள் அடித்து 25 விக்கெட்டுகளும் சாய்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்நாயகனாகவும் தேர்வாகினர். 

இந்த டெஸ்ட் தொடரை 2'1 என்ற கணக்கில் வென்ற இந்தியா, பார்டர் ' காவஸ்கர் டெஸ்ட் கோப்பையை தொடர்ந்து 4'ஆவது முறையாகக் கைப்பற்றியது. இந்த 4 முறையுமே 2'1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியனாகியுள்ளது இந்தியா. 2017, 2023'இல் சொந்த மண்ணிலும், 2018'19, 2020'21 காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவிலும் இந்தத் தொடரை இந்தியா வென்றுள்ளது. 

 அத்துடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு தொடர்ந்து 2'ஆவது முறையாகத் தகுதிபெற்றுள்ளது. இந்தத் தொடர் முடிவின் அடிப்படையில் இந்தியாவுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பு முடிவாக இருந்த நிலையில், அதற்கு முன்பாகவே நியூஸிலாந்துடனான டெஸ்ட்டில் இலங்கை தோல்வி கண்டதால் இந்தியா தனது இடத்தை உறுதி செய்துகொண்டது. 

முன்னதாக, கடந்த 9'ஆம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 480 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய இந்தியா 571 ரன்களுக்கு முதல் இன்னிங்ûஸ நிறைவு செய்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 91 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2'ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய ஆஸ்திரேலியா, ஞாயிற்றுக்கிழமை முடிவில் விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் எடுத்திருந்தது. 

கடைசி நாளான திங்கள்கிழை ஆட்டத்தை மேத்யூ குனேமான், டிராவிஸ் ஹெட் தொடர்ந்தனர். இதில் குனேமான் 1 பவுண்டரி உள்பட 6 ரன்களுக்கு வெளியேறினார். 2'ஆவது விக்கெட்டுக்கு இணைந்த டிராவிஸ் ஹெட் ' மார்னஸ் லபுசான் கூட்டணி 139 ரன்கள் சேர்த்தது. இந்த பார்ட்னர்ஷிப்பை அக்ஸர் படேல் 60'ஆவது ஓவரில் பிரித்தார். 

10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 90 ரன்களை எட்டியிருந்த ஹெட், ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். தொடர்ந்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆட வந்தார். இவ்வாறாக ஆஸ்திரேலியா 78.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்திருந்தபோது ஆட்டத்தை டிரா செய்ய இரு அணிகளின் கேப்டன்களும் ஒப்புக்கொண்டனர். 

லபுசான் 7 பவுண்டரிகளுடன் 63, ஸ்மித் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com