வில்லியம்சனுக்கு ஆறுதல் கூறிய விராட் கோலி!
By DIN | Published On : 02nd May 2023 06:46 PM | Last Updated : 02nd May 2023 06:46 PM | அ+அ அ- |

முதல் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது. சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 178 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய குஜராத் அணி 20வது ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குஜராத் அணி பீல்டிங்கின் போது சிஎஸ்கே அணி வீரர் ருதுராஜ் அடித்த பந்தினை பவுண்டரி லைனில் தடுக்க பாய்ந்து குதித்தபோது கால்கள் மடங்கி கீழே விழுந்தார். சிக்ஸரை தடுத்து பவுண்டரியாக மாற்றினார். ஆனால் கீழே விழுந்த வில்லியம்சன் எழ முடியவில்லை. பின்னர் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார்.
இந்த காயம் காரணத்தினால் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார். இதுமட்டுமில்லாமல் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலும் விளையாட முடியாது என அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது அறுவை சிகிச்சை முடிந்து உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “புகைப்படங்களை பகிர்ந்து புதிய வீட்டில் தங்கிக் கொண்டு இருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவிற்கு விராட் கோலி, “விரைவில் மீண்டு வாருங்கள் சகோதரா” என கமெண்ட்டில் தெரிவித்துள்ளார். மேலும் ஹார்திக் பாண்டியா நெருப்பு எமோஜிக்களை கமெண்டில் பதிவிட்டுள்ளார்.