பாரீஸ் பாராலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா தங்கம் வென்றார். மூன்றாவது இடத்தைப் பிடித்த மோனா அகர்வாலுவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.
பாரீஸ் பாராலிம்பிக்ஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகரா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரான அவனி லெகரா, தகுதிச் சுற்றில் இரண்டாவது இடத்தைப் பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இறுதிச்சுற்றில் 8 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், இந்தியா சார்பில் அவனி லெகரா, மோனா அகர்வால் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா 249.7 புள்ளிகளுடன் முதலிடமும், தென் கொரியாவின் லீ யுன்ரி 246.8 புள்ளிகளுடன் இரண்டாமிடமும், மற்றொரு இந்திய வீராங்கனையான மோனா அகர்வால் 228.7 புள்ளிகளுடன் மூன்றாமிடமும் பிடித்தனர்.