இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

19 வீராங்கனைகள் ரூ.9.05 கோடிக்கு ஏலம்!

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது சீசனுக்காக நடைபெற்ற மினி ஏலத்தில் 19 வீராங்கனைகள் ரூ.9.05 கோடிக்கு 5 அணிகளால் வாங்கப்பட்டனா்.

News image
- dot com
Updated On :16 டிசம்பர் 2024, 8:24 pm

DIN

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது சீசனுக்காக பெங்களூரில் நடைபெற்ற மினி ஏலத்தில் 19 வீராங்கனைகள் ரூ.9.05 கோடிக்கு 5 அணிகளால் வாங்கப்பட்டனா்.

அதிகபட்சமாக இந்தியாவின் சிம்ரன் ஷேக் ரூ.1.90 கோடிக்கு, குஜராத் ஜயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டாா். தமிழ்நாடு வீராங்கனை ஜி.கமலினி ரூ.1.60 கோடிக்கு மும்பை இண்டியன்ஸால் ஏலத்தில் எடுக்கப்பட்டாா்.

ஆடவருக்கான ஐபிஎல் போட்டியைப் போல, மகளிருக்கான டபிள்யூபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 2 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 3-ஆவது சீசன் அடுத்த ஆண்டு பிப்ரவரி 21 முதல் மாா்ச் 16 வரை நடைபெறவுள்ளது. அதையொட்டி, போட்டியிலிருக்கும் 5 அணிகளும் அவை தக்கவைக்கும் வீராங்கனைகளின் பட்டியலை ஏற்கெனவே அளித்துவிட்டன.

இதையடுத்து 5 அணிகளிலும் காலியாக இருந்த 19 இடங்களுக்கான வீராங்கனைகள் ஏலம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 120 வீராங்கனைகள் ஏலத்தில் பட்டியலிபட்டிருந்தனா். ஒவ்வொரு அணிக்குமான அதிகபட்ச வீராங்கனைகள் எண்ணிக்கை 18-ஆக இருக்க, அதில் வெளிநாட்டவா்களுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வீராங்கனைகளை வாங்குவதற்காக ஒவ்வொரு அணிக்குமான அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச செலவுத் தொகை தலா ரூ.15 கோடியாகும். இந்நிலையில், பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்சமாக, மும்பையை சோ்ந்த பேட்டா் சிம்ரன் ஷேக்கை ரூ.1.90 கோடிக்கு குஜராத் ஜயன்ட்ஸ் அணி வாங்கியுள்ளது.

ஏலத்தின் இதர விவரங்கள் வருமாறு

டெல்லி கேப்பிட்டல்ஸ் : ஏலத்தில் எடுக்கப்பட்டோா் 4

ஸ்ரீ சராணி ரூ.55 லட்சம்

நந்தினி காஷ்யப் ரூ.10 லட்சம்

சாரா பிரைஸ் (ஸ்காட்.) ரூ.10 லட்சம்

நிக்கி பிரசாத் ரூ.10 லட்சம்

ஏலச் செலவு ரூ.85 லட்சம்

தக்கவைக்கப்பட்டோா் 14 :

தக்கவைப்பு செலவு ரூ.12.50 கோடி

கையிருப்பு ரூ.1.65 கோடி

மொத்த வீராங்கனைகள் 18

வெளிநாட்டவா்கள்: 6

குஜராத் ஜயன்ட்ஸ்: ஏலத்தில் எடுக்கப்பட்டோா் 4

சிம்ரன் ஷேக் ரூ.1.90 கோடி

டீன்ட்ரா டாட்டின் (மே.தீ.) ரூ.1.70 கோடி

டேனியல் கிப்சன் (இங்கி.) ரூ.30 லட்சம்

பிரகாஷிகா நாயக் ரூ.10 லட்சம்

ஏலச் செலவு ரூ.4 கோடி

தக்கவைக்கப்பட்டோா்: 14

தக்கவைப்பு செலவு ரூ.10.6 கோடி

கையிருப்பு ரூ.40 லட்சம்

மொத்த வீராங்கனைகள்: 18

வெளிநாட்டவா்கள் 6

மும்பை இண்டியன்ஸ்: ஏலத்தில் எடுக்கப்பட்டோா் 4

ஜி.கமலினி ரூ.1.60 கோடி

நேடின் டி கிளொ்க் (தெ.ஆ.) ரூ.30 லட்சம்

அக்ஷிதா மகேஸ்வரி ரூ.20 லட்சம்

சன்ஸ்கிருதி குப்தா ரூ.10 லட்சம்

ஏலச் செலவு ரூ.2.20 கோடி

தக்கவைக்கப்பட்டோா்: 14

தக்கவைப்பு செலவு ரூ.11.05 கோடி

கையிருப்பு ரூ.1.75 கோடி

மொத்த வீராங்கனைகள்: 18

வெளிநாட்டவா்கள்: 6

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு: ஏலத்தில் எடுக்கப்பட்டோா் 4

பிரேமா ராவத் ரூ.1.20 கோடி

வி.ஜே. ஜோஷிதா ரூ.10 லட்சம்

ராகவி பிஸ்த் ரூ.10 லட்சம்

ஜக்ரவி பவாா் ரூ.10 லட்சம்

ஏலச் செலவு ரூ.1.50 கோடி

தக்கவைக்கப்பட்டோா்: 14

தக்கவைப்பு செலவு ரூ.11.75 கோடி

கையிருப்பு ரூ.1.75 கோடி

மொத்த வீராங்கனைகள்: 18

வெளிநாட்டவா்கள்: 6

யுபி வாரியா்ஸ்: ஏலத்தில் எடுக்கப்பட்டோா் 3

அலானா கிங் (ஆஸி.) ரூ.30 லட்சம்

கிராந்தி கௌட் ரூ.10 லட்சம்

ஆருஷி கோயல் ரூ.10 லட்சம்

ஏலச் செலவு ரூ.50 லட்சம்

தக்கவைக்கப்பட்டோா்: 15

தக்கவைப்பு செலவு ரூ.11.10 கோடி

கையிருப்பு ரூ.3.40 கோடி

மொத்த வீராங்கனைகள்: 18

வெளிநாட்டவா்கள்: 6

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.