பேஷ்பால் யுக்தியை விளாசும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்!

பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு கிடைத்திருக்கும் மிக மோசமான தோல்வி
பேஷ்பால் யுக்தியை விளாசும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்!

இங்கிலாந்து அணியின் பேஷ்பால் யுக்தியை அந்த அணியின் முன்னாள் கேப்டன்களான நாசர் ஹுசைன் மற்றும் மைக்கல் வாகன் ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமானத் தோல்வியைத் தழுவியது.

பேஷ்பால் யுக்தியை விளாசும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்!
டெஸ்ட் கிரிக்கெட் கடினமானது, ஆனால்...மனம் திறந்த ஜெய்ஸ்வால்!

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் பேஷ்பால் யுக்தியை அந்த அணியின் முன்னாள் கேப்டன்களான நாசர் ஹுசைன் மற்றும் மைக்கல் வாகன் ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இங்கிலாந்தின் பேஷ்பால் யுக்தி தொடர்பாக அந்த அணியின் முன்னாள் கேப்டன்கள் விமர்சித்தவை பின்வருமாறு

மைக்கல் வாகன்

இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு கிடைத்திருக்கும் மிக மோசமான தோல்வி. இந்த மோசமான தோல்வி பேஷ்பால் யுக்தியின் விளைவை வெளிக்கொண்டு வந்துள்ளது. இங்கிலாந்து வீரர்கள் எல்லா நேரங்களிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. அவர்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கும்போது அதிரடியாக விளையாடலாம்.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் எப்படி விளைடினார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். 30 - 40 பந்துகளை எதிர்கொண்டு அழுத்தத்தைப் போக்கியவுடன் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டை அப்படித்தான் விளையாட வேண்டும்.

பேஷ்பால் யுக்தியை விளாசும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்!
4-வது டெஸ்ட்டில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு?

228.5 ஓவர்களில் இந்திய அணி 875 ரன்கள் எடுத்தது. இந்திய அணி பேட்டிங் செய்வதை பார்ப்பதற்கு சலிப்பாக இருந்தது என யாரும் கூற முடியாது. இங்கிலாந்து எவ்வாறு சிறப்பாக பேட்டிங் செய்யலாம் என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். இந்திய அணி சிறப்பாக விளையாடியது. ஜோ ரூட் தவறான ஷாட்டினை விளையாடி ஆட்டமிழந்தபோது என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை.

நாசர் ஹுசைன்

பேஸ்பால் யுக்தி என்பது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவது. ஆனால், அதே நேரத்தில் அழுத்தமான சூழலில் அதற்கேற்றவாறு இங்கிலாந்து விளையாட வேண்டும். சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு இங்கிலாந்து வீரர்கள் பேட் செய்ய வேண்டும். இந்தியா சிறப்பாக விளையாடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com