வேகப் பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக லெக் திசையில் பௌன்சர்கள் வீசுவது தொடர்பாக கிரிக்கெட் விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று (பிப்ரவரி 29) தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த நிலையில், வேகப் பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக லெக் திசையில் பௌன்சர்கள் வீசுவது தொடர்பாக கிரிக்கெட் விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: லெக் திசையில் பந்துவீசுவதில் சிறிய அளவில் விதிமுறை மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என நினைக்கிறேன். மிகவும் லெக் திசையில் வீசப்படும் பௌன்சர்களை விளையாடுவது கடினம். வேகப் பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக லெக் திசையில் பந்துகளை வீசும்போது அவர்களுக்கு நடுவர்கள் எச்சரிக்கை கொடுக்க வேண்டும். மீண்டும் அவர்கள் அவ்வாறு பந்துவீசினால் அதனை அகலப் பந்து (வைடு பால்) என அறிவிக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்கரன்கோவிலில் இன்று ஆடித் தவசுக் காட்சி! 250 சிறப்பு பேருந்துகள்! போக்குவரத்து மாற்றம்

ஆஷஸ் தொடரை இந்தியாவில் நடத்த திட்டமிடும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்?
சென்னை சேப்பாக்கத்தில் பிக்பாஷ் லீக்கின் முதல் போட்டி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஆசியப் போட்டி, உலகக் கோப்பைக்கு தயாராகும் இந்திய ஹாக்கி அணி
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |




