மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேப்டவுனில் வென்ற முதல் ஆசிய அணி: இந்தியா அபார வெற்றி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

News image
Updated On :4 ஜனவரி 2024, 11:53 am

DIN

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்தியாவும் 153 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 

இரண்டாம் ஒன்னிங்ஸில் மார்க்ரம் மட்டும் சதமடிக்க தென்னாபிரிக்கா 176 ரன்களுக்கு பும்ராவின் அசத்தலான பந்து வீச்சில் ஆல் அவுட்டானது. 

79 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 11.6 ஓவரில் 80/3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

ஜெய்ஸ்வால் 28, ஷுபம்ன் கில் 10, விராட் கோலி 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். ரோஹித் சர்மா 17 ரன்களுடனும் ஸ்ரேயாஷ் ஐயர் 4 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றிக்கு உதவினார்கள். 

இந்த வெற்றியின் மூலம் 1-1 என சமநிலையில் முடிந்தது. கேப்டவுன் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற முதல் ஆசிய நாடாக இந்திய அணி திகழ்கிறது. 

தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற இந்திய அணி டி20, டெஸ்டினை டிரா செய்தது. ஒருநாள் போட்டியில் வென்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.