காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஒரே வாரத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸிலிருந்து விலகிய அம்பத்தி ராயுடு!

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸிலிருந்து விலகிய அம்பத்தி ராயுடுவின் முடிவை தெலுங்கு தேசம் கட்சி பாராட்டியுள்ளது.

Published On :

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸிலிருந்து விலகிய அம்பத்தி ராயுடுவின் முடிவை தெலுங்கு தேசம் கட்சி பாராட்டியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு கடந்த ஆண்டு டிசம்பரில் ஆந்திர முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைந்தார். இந்த நிலையில், தற்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: நான் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளேன். சில காலம் அரசியலை விட்டு விலகி இருக்கலாம் என முடிவெடுத்துள்ளேன். எனது எதிர்கால முடிவுகள் குறித்து விரைவில் தெரிவிப்பேன் எனப் பதிவிட்டுள்ளார். 

அம்பத்தி ராயுடுவின் இந்த முடிவை ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி பாராட்டியுள்ளது. 

இது தொடர்பாக எக்ஸ்  வலைத்தளத்தில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பதிவிட்டிருப்பதாவது: ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி போன்ற ஒருவருடன் உங்களது அரசியல் பயணத்தை தொடராதது மகிழ்ச்சியளிக்கிறது. உங்களது எதிர்கால முடிவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் எனப் பதிவிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.