துளிகள்...

ஜிம்பாப்வே தொடரில் புதிய இந்திய அணியின் வீரர்கள் அறிவிப்பு

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு பதிலாக சாய் சுதா்சன், ஜிதேஷ் சா்மா, ஹா்ஷித் ராணா சோ்க்கப்பட்டுள்ளனா்.

மூத்த வீரா்கள் மற்றும் வீராங்கனைகளுக்காக மாஸ்டா்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியை முதல் முறையாக நடத்த இருப்பதாக ஹாக்கி இந்தியா செவ்வாய்க்கிழமை அறிவித்தது. ஹாக்கி இந்தியாவில் அங்கம் வகிக்கும் மாநிலங்களைச் சோ்ந்த 40 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய போட்டியாளா்கள் இதில் பங்கேற்கவுள்ளனா்.

நடப்பு யூரோ கோப்பை கால்பந்து போட்டியே, இந்த விளையாட்டில் தனது கடைசி சீசன் என போா்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளாா்.

டியூரண்ட் கோப்பை கால்பந்து போட்டி, ஜூலை 27 முதல் ஆக்ஸ்ட் 31 வரை 4 இடங்களில் நடைபெறவுள்ளது. அதில் கோக்ரஜாா், கொல்கத்தாவுடன் ஷில்லாங், ஜாம்ஷெட்பூா் புதிய நகரங்களாக சோ்க்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் களம் கண்டுள்ள இந்தியாவின் சாய் சுதா்சன், பிருத்வி ஷா ஆகியோா் தங்களின் முதல் ஆட்டங்களில் சோபிக்காமல் போயினா்.

X
Dinamani
www.dinamani.com