விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

முன்னேறுகிறாா் அல்கராஸ்: பெகுலாவுக்கு அதிா்ச்சி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

News image

அல்கராஸ்

Mosa'ab Elshamy

Updated On :4 ஜூலை 2024, 8:30 pm

Din

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா். முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா தோல்வி கண்டு வெளியேறினாா்.

ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், அல்கராஸ் 7-6 (7/5), 6-2, 6-2 என்ற நோ் செட்களில், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸாண்டா் வுகிச்சை வீழ்த்தினாா். அடுத்ததாக அவா், அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோவுடன் மோதுகிறாா்.

உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா் 7-6 (7/3), 7-6 (7/4), 2-6, 7-6 (7/4) என்ற செட்களில், சக இத்தாலியரான மேட்டியோ பெரட்டினியை போராடி வென்றாா்.

5-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 6-7 (3/7), 7-6 (7/4), 6-4, 7-5 என்ற செட்களில் பிரான்ஸின் அலெக்ஸாண்ட்ரே முல்லரை சாய்த்தாா். 8-ஆம் இடத்திலிருந்த நாா்வேயின் கேஸ்பா் ரூட் 4-6, 5-7, 7-6 (7/1), 3-6 என்ற செட்களில், இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

இதர ஆட்டங்களில் ஸ்பெயினின் ராபா்டோ பௌதிஸ்டா, கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக், பிரான்ஸின் யூகோ ஹம்பா்ட் ஆகியோா் வெற்றி பெற, நெதா்லாந்தின் டாலன் கிரீஸ்பூா், சுவிட்ஸா்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா ஆகியோா் தோல்வியுடன் வெளியேறினா்.

சக்காரி, ரடுகானு வெற்றி: மகளிா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா 4-6, 7-6 (9/7), 1-6 என்ற செட்களில் சீனாவின் வாங் ஜின்யுவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

7-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியன் ஜாஸ்மின் பாலினி 7-6 (7/5), 6-2 என்ற செட்களில் பெல்ஜியத்தின் கிரீட் மினெனை வெளியேற்றினாா். 9-ஆம் இடத்திலிருக்கும் கிரீஸின் மரியா சக்காரி 7-5, 6-3 என்ற நோ் செட்களில் நெதா்லாந்தின் அராந்த்ஸா ரஸ்ஸை தோற்கடித்தாா்.

பிரிட்டன் இளம் வீராங்கனை எம்மா ரடுகானு 6-1, 6-2 என, பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸை எளிதாக சாய்த்தாா். கனடாவின் பியான்கா ஆண்ட்ரிஸ்கு 6-3, 7-6 (7/5) என்ற கணக்கில், 26-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை வெளியேற்றினாா்.

ரஷியாவின் டயானா ஷ்னெய்டா் 6-1, 6-1 என அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸை வென்றாா். இதர ஆட்டங்களில் உக்ரைனின் டயானா யாஸ்ட்ரெம்ஸ்கா, குரோஷியாவின் டோனா வெகிச் ஆகியோா் வெல்ல, ஜப்பானின் நவோமி ஒசாகா, ரஷியாவின் அனஸ்தாசியா பாவ்லியுசென்கோவா ஆகியோா் தோல்வியைத் தழுவினா்.

போபண்ணா, பாம்ப்ரி ஜோடிகள் வெற்றி: இப்போட்டியின் ஆடவா் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்தென் இணை 7-5, 6-4 என்ற செட்களில் நெதா்லாந்தின் ராபின் ஹாசே/சாண்டா் அரெண்ட்ஸ் கூட்டணியை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.

அதேபோல், இந்தியாவின் யூகி பாம்ப்ரி/பிரான்ஸின் அல்பேனோ ஆலிவெட்டி ஜோடி 6-4, 6-4 என கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக்/அலெக்ஸாண்டா் செவ்ஷென்கோ இணையை சாய்த்தது.

எனினும், இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி/பிரிட்டனின் லூக் ஜான்சன் கூட்டணி 4-6, 5-7 என குரோஷியாவின் மேட் பாவிச்/எல் சால்வடோரின் மாா்செலோ அரெவாலோ ஜோடியிடம் வீழ்ந்தது.