நான் சந்தித்த சிறந்த பேட்ஸ்மேன் இவர்தான்; மனம் திறந்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!
பந்துவீச்சில் தான் சந்தித்த சிறந்த பேட்ஸ்மேன் குறித்து இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மனம் திறந்துள்ளார்.


பந்துவீச்சில் தான் சந்தித்த சிறந்த பேட்ஸ்மேன் குறித்து இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மனம் திறந்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளதாக தனது ஓய்வு முடிவை ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போது அவர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்தான், பந்துவீச்சில் தான் எதிர்கொண்ட சிறந்த பேட்ஸ்மேன் என ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

சச்சின் டெண்டுல்கர் (கோப்புப் படம்)
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பந்துவீச்சில் நான் எதிர்கொண்ட மிகவும் கடினமான வீரர் சச்சின் டெண்டுல்கர். சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக சிறப்பாக திட்டங்கள் எதையும் செயல்படுத்தியாக எனக்கு நினைவில்லை. அவர் பேட்டிங் செய்ய வந்தால், என்னால் மோசமான பந்துகளை வீச முடியாது. அந்த மாதிரியான மிகச் சிறந்த வீரர் சச்சின் டெண்டுல்கர். இந்திய அணிக்கு அவர் மிகவும் முக்கியமான பேட்ஸ்மேனாக திகழ்ந்தார். அவரை ஆட்டமிழக்கச் செய்தால், மைதானத்தில் ரசிகர்களின் மனநிலை மாறிவிடும். அவரது விக்கெட் அந்த அளவுக்கு மிகவும் முக்கியமானது என்றார்.
டெஸ்ட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டினை ஜேம்ஸ் ஆண்டர்சன் 9 முறை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...