ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு சச்சின் டெண்டுல்கர் புகழாரம்!

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சனை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு  சச்சின் டெண்டுல்கர் புகழாரம்!
Published on
Updated on
1 min read

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சனை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போது, முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு  சச்சின் டெண்டுல்கர் புகழாரம்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் 704 விக்கெட்டுகளுடன் விடைபெற்ற ஜேம்ஸ் ஆண்டர்சன்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்தப் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினையும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதன்மூலம், 704 விக்கெட்டுகளுடன் தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்துள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இந்த நிலையில், ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீசுவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக சச்சின் டெண்டுல்கர் அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: கடந்த 22 ஆண்டுகளாக நீங்கள் சிறப்பாக பந்துவீசி வருகிறீர்கள். இதோ உங்களுக்காக என்னிடமிருந்து சில வார்த்தைகள். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் பந்துவீசியதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பந்துவீச்சில் உங்களது வேகம், துல்லியத்தன்மை மற்றும் ஸ்விங் ஆகியவை மிகவும் சிறப்பாக இருக்கும். உங்களது ஆட்டத்தால் இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளித்துள்ளீர்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com