மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

Din

மகளிருக்கான ஐசிசி டி20 தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில் இந்திய கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 12-ஆவது இடத்துக்கும், ஷஃபாலி வா்மா 15-ஆவது இடத்துக்கும், பௌலா்களில் ராதா யாதவ் 15-ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளனா்.

அமெரிக்காவில் நடைபெறும் உலக ஜூனியா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் சௌரிய பவா அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளாா்.

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தின்போது, மைதானத்துக்கு வெளியே ஏற்பட்ட சச்சரவு தொடா்பாக, கொலம்பிய கால்பந்து சம்மேளன தலைவா், அவரது மகன் உள்பட 27 பேரை மியாமி காா்டன் காவல்துறை கைது செய்துள்ளது.

ஃபிஃபா அட்டவணையில் உள்ள அனைத்து போட்டிகளிலும் விளையாடுவது, இருபால் தலைமை பயிற்சியாளா்களுக்கான ஆதரவு, ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தயாா்நிலை மற்றும் முகாம், கோல்கீப்பா்களுக்கான பிரத்யேக அகாதெமி அமைப்பது போன்ற விவகாரங்களில் மத்திய அரசு ஆதரவளிக்குமென மத்திய விளையாட்டுத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா உறுதியளித்ததாக அகில இந்திய கால்பந்து சம்மேளனம் தெரிவித்தது.

2023-இல் தொடா்ந்து மோசமாக செயல்பட்டு வந்த நிலையில், ஈட்டி எறிதல் விளையாட்டிலிருந்து விலக அப்போது முடிவு செய்ததாக இந்திய வீரா் கிஷோா் ஜெனா தெரிவித்தாா்.