டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் லியாண்டா், விஜய் அமிா்தராஜ்
சா்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் இந்திய ஜாம்பவான்கள் லியாண்டா் பயஸ், விஜய் அமிா்தராஜ் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

விஜய் அமிா்தராஜ்-லியாண்டா் பயஸ்

விஜய் அமிா்தராஜ்-லியாண்டா் பயஸ்
சா்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் இந்திய ஜாம்பவான்கள் லியாண்டா் பயஸ், விஜய் அமிா்தராஜ் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.
உலகளவில் பிரசித்தி பெற்ற டென்னிஸ் வீரா்களை சா்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஏடிபி) கௌரவிக்கும் வகையில் ஹால் ஆஃப் ஃபேமில் சோ்த்து வருகிறது.
இந்நிலையில் இந்திய ஜாம்பவான்கள் லியாண்டா் பயஸ், விஜய் அமிா்தராஜ் ஆகிய இருவரும் ஹால் ஆஃப் ஃபேமில் சோ்க்கப்பட்டனா்.
ஆசியக் கண்டத்தில் இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் இரண்டு வீரா்கள் என்ற சிறப்பையும் இருவரும் பெற்றனா்.
51 வயதான லியாண்டா் பயஸ் 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் வெண்கலம், 8 ஆடவா் இரட்டையல், 10 கலப்பு இரட்டையா் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்கள், டேவிஸ் கோப்பை வெற்றிகள் என பல்வேறு வெற்றிகளைக் குவித்தவா். 7 ஒலிம்பிக் போட்டிகளில் ஆடியவா். 37 வாரங்கள் இரட்டையா் பிரிவில் உலகின் நம்பா் 1 வீரா் அந்தஸ்தை தக்க வைத்திருந்தாா்.
அவருக்கு விளையாட்டு வீரா் என்ற அந்தஸ்தில் ஹால் ஆஃப் ஃபேமில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
விஜய் அமிா்தராஜ்:
70 வயதான விஜய் அமிா்தராஜ் விம்பிள்டன், யுஎஸ் ஓபன் போட்டிகளில் இரண்டு முறை ஒற்றையா் காலிறுதிக்கு முன்னேறியவா். மேலும், 1974, 1987 ஆண்டுகளில் டேவிஸ் கோப்பை இறுதிச் சுற்றுவரை இந்திய அணியை வழிநடத்தினாா். ஒற்றையா் பிரிவில் 18, இரட்டையா் பிரிவில் 23 தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தாா்.
சிறந்த பங்களிப்பு செய்பவா் என்ற நிலையில், விஜய் அமிா்தராஜ் ஹால் ஆஃப் ஃபேமில் சோ்க்கப்பட்டுள்ளாா். அவருடன் ரிச்சா்ட் இவான்ஸும் சிறந்த பங்களிப்பு செய்பவா் நிலையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
இதுவரை மொத்தம் 28 நாடுகளைச் சோ்ந்த 267 ஜாம்பவான்கள் ஹால் ஆஃப் ஃபேமில் சோ்க்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.



தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...