தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சாளர்களின் கேப்டன்: அக்‌ஷர் படேல்

சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சாளர்களின் கேப்டன் என இந்திய அணியின் அக்‌ஷர் படேல் தெரிவித்துள்ளார்.

News image
- படம் | AP
Updated On :28 ஜூலை 2024, 11:53 am

DIN

சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சாளர்களின் கேப்டன் என இந்திய அணியின் அக்‌ஷர் படேல் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று (ஜூலை 27) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 213 ரன்கள் குவித்தது. 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 170 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியைத் தழுவியது.

149 ரன்களுக்கு வெறும் இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்த இலங்கை அணியை இந்திய பந்துவீச்சாளர்கள் அடுத்த 21 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்து அசத்தினர். இதன்மூலம், டி20 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சாளர்களின் கேப்டன் எனவும், பந்துவீச்சாளர்கள் அவர்களது திட்டங்களை சுதந்திரமாக செயல்படுத்த அவர் அனுமதிப்பதாகவும் இந்திய அணியின் அக்‌ஷர் படேல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடினேன். அவர் பந்துவீச்சாளர்களின் கேப்டன் என்பது எனக்குத் தெரியும். அவர் பந்துவீச்சாளர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளார். அவர் பந்துவீச்சு தொடர்பாக சரியான ஆலோசனைகளை வழங்குவார் என்றார்.

இந்தியா - இலங்கை இடையிலான 2-வது டி20 போட்டி இன்று (ஜூலை 28) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.