தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்தி
/

தென்னாப்பிரிக்காவை 143 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

News image
- படம் | இந்திய அணி (இன்ஸ்டாகிராம்)
Updated On :16 ஜூன் 2024, 2:57 pm

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்க மகளிரணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், ஒரு டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் இன்று பெங்களூவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் தொடங்கியது. பெங்களூருவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் பேட் செய்தது.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா சதம் விளாசி அசத்தினார். அவர் 127 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, தீப்தி சர்மா அதிகபட்சமாக 37 ரன்களும், பூஜா வஸ்த்ரகார் 31 ரன்களும் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் அயபோங்கா காஹா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மசபாட்டா க்ளாஸ் 2 விக்கெட்டுகளையும், அன்னேரி டெர்க்சன், ஷாங்கேஷ் மற்றும் மிளாபா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி 122 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சூன் லூஸ் 33 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, சினாலோ ஜாஃப்டா 27 ரன்களும், மாரிஷேன் காப் 24 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அறிமுக வீராங்கனை ஆஷா ஷோபனா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளையும், ரேனுகா தாக்குர் சிங், பூஜா வஸ்த்ரகார், மற்றும் ராதா யாதவ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்க அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.