பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா; தென்னாப்பிரிக்காவுக்கு 266 ரன்கள் இலக்கு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்மிருதி மந்தனாவின் சதத்தினால் இந்திய அணி 265 ரன்கள் குவித்துள்ளது.

News image
ஸ்மிருதி மந்தனா- படம் | பிசிசிஐ (எக்ஸ்)
Updated On :16 ஜூன் 2024, 1:05 pm

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்மிருதி மந்தனாவின் சதத்தினால் இந்திய அணி 265 ரன்கள் குவித்துள்ளது.

தென்னாப்பிரிக்க மகளிரணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், ஒரு டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் இன்று பெங்களூவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் தொடங்கியது. பெங்களூருவில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் பேட் செய்தது.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா சதம் விளாசி அசத்தினார். அவர் 127 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, தீப்தி சர்மா அதிகபட்சமாக 37 ரன்களும், பூஜா வஸ்த்ரகார் 31 ரன்களும் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் அயபோங்கா காஹா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மசபாட்டா க்ளாஸ் 2 விக்கெட்டுகளையும், அன்னேரி டெர்க்சன், ஷாங்கேஷ் மற்றும் மிளாபா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.