மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீரர் பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி.

News image

பிரித்விராஜ் தொண்டைமான் - கோப்புப் படம்

Updated On :18 ஜூன் 2024, 1:18 pm

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீரர் பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளார்.

இதன்மூலம் பிருத்விராஜ் தொண்டைமான் தலைமையில் 5 பேர் கொண்ட குழு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் பங்கேற்கவுள்ள வீரர்கள் குறித்த அறிவிப்பை இந்திய தேசிய ரைபில் கூட்டமைப்பு இன்று (ஜூன் 18) வெளியிட்டது.

இதில் ஷாட் கன் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளார். இவர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்.

ஆண்கள் பிரிவில் புவனேஷ் மெந்திரத்தா, அனன்ஜீத் சிங் நரூகா, ஆகியோரும் பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ளனர்.

பெண்கள் பிரிவில் ராஜேஸ்வரி முகாரி, ரைசா தில்லான், மகேஷ்வரி செளஹான், ஸ்ரேயாஸி சிங் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.