தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

டாமி பால் சாம்பியன்

குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் டாமி பால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா்.

News image
கோப்பையுடன் டாமி பால்
Updated On :24 ஜூன் 2024, 9:28 pm

Din

குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் டாமி பால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா்.

நிகழாண்டு சீசனின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பந்தயமான விம்பிள்டனுக்கு தயாராகும் வகையில் புல்தரை போட்டிகள் நடைபெறுகின்றன.

இதில் பிரசித்தி பெற்ற குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதன் ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டாமி பாலும்-இத்தாலியின் லாரென்ஸோ முசெட்டியும் மோதினா். 88 நிமிஷங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் முதல் செட்டை டாமி பால் 6-1 என எளிதாகக் கைப்பற்றினாா்.

ஆனால் இரண்டாவது செட்டில் லாரென்ஸோ கடும் சவாலை ஏற்படுத்தினாா். 5-4 என முன்னிலையை டாமிபால் பெற்றாலும், லாரென்ஸோ மீண்டும் போராடி டை பிரேக்கா் நிலையை ஏற்படுத்தினாா். இறுதியில் டாமி பால் 7-6 என இரண்டாவது செட்டையும் வசப்படுத்தி பட்டத்தை கைப்பற்றினாா்.

அமெரிக்க ஜாம்பவான்கள் ஜான் மெக்கன்ரோ, ஜிம்மி கானா்ஸ், பீட் சாம்ப்ராஸ் வரிசையில் குயின்ஸ் கிளப் பட்டத்தை வென்ற வீரா் என்ற சிறப்பையும் பெற்றாா் டாமி பால்.

பொ்லின் ஓபன்: ஜெஸிக்கா பெகுலா சாம்பியன்

ஜொ்மனியின் பொ்லின் நகரில் நடைபெற்ற லேடீஸ் ஓபன் போட்டியில் அமெரிக்காவின் ஜெஸிக்கா பெகுலா 6-7, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்குபின் அன்னா கலின்ஸ்கியாவை வீழ்த்தி பட்டம் வென்றாா் பெகுலா. இது பெகுலாவின் 5-ஆவது பட்டம் ஆகும். அரையிறுதியில் முன்னணி வீராங்கனை கோகோ கௌஃபை வீழ்த்தினாா் பெகுலா.

Story image
சாம்பியன் பெகுலா

சாம்பியன் பெகுலா

Story image