அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!

முதல் போட்டியில் ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் அணி இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தியுள்ளது.
அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு  பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
படம் | அயர்லாந்து கிரிக்கெட் (எக்ஸ்)

முதல் போட்டியில் ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் அணி இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தியுள்ளது.

பாகிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் அயர்லாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், நேற்று இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி நடைபெற்றது.

அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு  பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்கு 50-வது வெற்றி!

இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 193 ரன்கள் எடுக்க, அந்த இலக்கை பாகிஸ்தான் அணி 16.5 ஓவர்களில் எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

படம் | பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

பாகிஸ்தான் தரப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ரிஸ்வான் 75 ரன்களும், ஃபகர் ஸமான் 78 ரன்களும் எடுத்தனர். முகமது ரிஸ்வானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு  பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
பாகிஸ்தான் வீரர்கள் ஸ்டிரைக் ரேட்டில் கவனம் செலுத்த வேண்டும்: யூனிஸ் கான்

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (மே 14) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com