2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்திய ஒலிம்பிக் சங்கம் வருகிற 2036 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்திடம் கடிதம் ஒன்றை சமர்பித்துள்ளது. மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் தகவல்படி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி இந்தக் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மகத்தான வாய்ப்பின் மூலம் இந்தியாவுக்கான பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், இளைஞர் வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் பலன்கள் ஏற்படும்.
கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியும் 2036 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவது குறித்து பேசியிருந்தார்.
அடுத்தாண்டு நடைபெறும் ஒலிம்பிக் சங்கத்தேர்தலுக்குப் பின்னர் போட்டியை நடத்தும் நாடுகள் குறித்து தெரிவிக்கப்படும். மேலும், இந்தத் தேர்தலை நடத்தும் நாடுகளுக்கானப் போட்டியில் சவூதி அரேபியா, கத்தார், துருக்கி ஆகிய நாடுகளும் உள்ளன.
இந்தியாவின் இந்தத் திட்டத்தை தற்போதைய ஒலிம்பிக் சங்கத் தலைவர் தாமஸ் பாஸ் ஆதரித்துள்ளார். கடைசியாக 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை இந்தியா நடத்தியது.
2036 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடத்தும் பட்சத்தில் போட்டிகள் அனைத்தும் அகமதாபாத்தில் நடைபெறவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்தியாவில் பதிவு செய்யப்படும் வா்த்தக கப்பல்களுக்கான மானியம்: 5 ஆண்டுளுக்கு நீட்டிப்பு

பெண் குழந்தைக்கு தந்தையானார் சூர்யகுமார் யாதவ்!

புதுவை மாநிலத்தில் உள்ளாட்சி தோ்தலை நடத்த வலியுறுத்தல்

ரூ. 10 லட்சத்துக்குள் 7 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் ரெனால்ட்!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

