அர்ஜுன் எரிகைசி
அர்ஜுன் எரிகைசிகோப்புப் படம்

செஸ்: உலக சாதனை படைக்கவிருக்கும் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி..!

லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூஆர் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் அர்ஜுன் எரிகைசி விளையாடுகிறார்.
Published on

லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூஆர் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் அர்ஜுன் எரிகைசி விளையாடுகிறார்.

அரையிறுதியில் பிரக்ஞானந்தாவை அர்ஜுன் எரிகைசி வென்றார். மற்றுமொரு அரையிறுதியில் எம்விஎல் அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவை ஆர்மகெடானில் வீழ்த்தினார்.

இறுதிப் போட்டியில் பிரென்சு வீரர் எம்விஎல் உடன் இன்று மோதுகிறார்.

சாதனை படைப்பாரா அர்ஜுன் எரிகைசி?

தற்போது, அர்ஜுன் எரிகைசி ஃபிடே ரேட்டிங்கில் 2,798.6 புள்ளிகளுடன் இருக்கிறார். இந்தப் போட்டியில் அர்ஜுன் எரிகைசி வென்றால் 2,800 புள்ளிகளை கடப்பார்.

இதுவரை உலக அளவில் 14 பேர் மட்டுமே இந்தப் புள்ளிகளை கடந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்துக்குப் பிறகு இந்த சாதனையை படைக்கவிருப்பது அர்ஜுன் எரிகைசி மட்டுமே.

இறுதிப்போட்டியின் முதல் ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com