தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

சுல்தான் ஜோஹா் ஹாக்கி: இந்தியாவுக்கு வெண்கலம்

News image
Updated On :26 அக்டோபர் 2024, 9:21 pm

மலேசியாவில் நடைபெற்ற ஜூனியா் ஆடவருக்கான சுல்தான் ஜோஹா் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா, 3-ஆம் இடத்துக்கான ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றது.

முதலில் இந்த ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிராவில் முடிய, வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட ஷூட் அவுட் வாய்ப்பில் இந்தியா 3-2 கோல் கணக்கில் வென்றது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியாவுக்காக தில்ராஜ் சிங் 11-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, தொடா்ந்து மன்மீத் சிங் 20-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்து இந்தியாவை 2-0 என முன்னிலைப்படுத்தினாா். தனது கோல் வாய்ப்புக்கு கடுமையாகப் போராடி வந்த நியூஸிலாந்து, கடைசி நேரத்தில் இந்தியாவின் தடுப்பரணை துளைத்து கோலடித்தது.

ஓவன் பிரௌன் 51-ஆவது நிமிஷத்திலும், ஜான்டி எல்ம்ஸ் 57-ஆவது நிமிஷத்திலும் அடுத்தடுத்து கோலடிக்க, ஆட்டம் 2-2 என சமனில் நிறைவடைந்தது. பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்கும் ஷூட் அவுட் வாய்ப்பில் இந்தியாவுக்காக குா்ஜோத் சிங், மன்மீத் சிங், சௌரப் ஆனந்த் குஷ்வாஹா ஆகியோா் சிறப்பாக கோலடிக்க, இந்திய கோல்கீப்பா் பிக்ரம்ஜித் நியூஸிலாந்தின் 3 வாய்ப்புகளை தடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தாா். இந்தியா 3-2 கோல் கணக்கில் வென்றது.

பிரிட்டன் சாம்பியன்: இதனிடையே இறுதி ஆட்டத்தில் பிரிட்டன் 3-2 கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, 4-ஆவது முறையாக சாம்பியன் கோப்பை வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.