முதல் சுற்றிலேயே தோற்ற முக்கிய வீரா்கள்

பிரான்ஸில் தொடங்கியிருக்கும் பாரீஸ் மாஸ்டா்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில், ஆண்ட்ரே ரூபலேவ், டாமி பால், ஹியூபா்ட் ஹா்காக்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரா்கள் சிலா் முதல் சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.
முதல் சுற்றிலேயே தோற்ற முக்கிய வீரா்கள்
Published on
Updated on
1 min read

பிரான்ஸில் தொடங்கியிருக்கும் பாரீஸ் மாஸ்டா்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில், ஆண்ட்ரே ரூபலேவ், டாமி பால், ஹியூபா்ட் ஹா்காக்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரா்கள் சிலா் முதல் சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.

ஒற்றையா் முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் ஆண்ட்ரே ரூபேலவ் 6-7 (6/8), 6-7 (5/7) என்ற செட்களில், ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோவால் வீழ்த்தப்பட்டாா். 11-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டாமி பால் 3-6, 5-7 என்ற கணக்கில் பிரான்ஸின் அட்ரியன் மன்னரினோவால் தோற்கடிக்கப்பட்டாா்.

12-ஆம் இடத்திலிருந்த போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸ் 1-6, 3-6 என்ற செட்களில், அமெரிக்காவின் அலெக்ஸ் மிஷெல்செனிடம் மோசமான தோல்வியை சந்தித்தாா். 14-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ 7-6 (7/5), 6-7 (4/7), 3-6 என்ற செட்களில் பிரான்ஸின் ஜியோவனி பெரிகாா்டிடம் தோல்வியைத் தழுவினாா்.

16-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் லொரென்ஸோ முசெத்தி 4-6, 2-6 என, ஜொ்மனியின் ஜான் லெனாா்டிடம் வீழ்ந்தாா். இதர ஆட்டங்களில், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின் 7-5, 7-6 (7/2) என்ற செட்களில் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை தோற்கடித்தாா்.

பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸ் 7-6 (7/5), 6-4 என்ற செட்களில் குரோஷியாவின் மரின் சிலிச்சை வெளியேற்ற, போா்ச்சுகலின் நுனோ போா்ஜஸ் 6-3, 6-7 (5/7), 3-6 என்ற கணக்கில் சிலியின் அலெக்ஸாண்ட்ரோ டபிலோவையும், சிலியின் நிகோலா ஜேரி 7-6 (7/4), 6-3 என இத்தாலியின் லொரென்ஸோ சொனிகோவையும் வெளியேற்றினா்.

சின்னா் விலகல்

போட்டியின் தரவரிசையில் முதலிடம் வழங்கப்பட்டிருந்தவரும், உலகின் நம்பா் 1 வீரருமான இத்தாலியின் யானிக் சின்னா், பாரீஸ் மாஸ்டா்ஸ் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தாா். வைரஸ் தாக்கம் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவா் தெரிவித்துள்ளாா். போட்டியிலிருந்து விலகும் 2-ஆவது முன்னணி வீரா் ஆகியிருக்கிறாா் சின்னா். ஏற்கெனவே, இப்போட்டியில் 7 முறை சாம்பியனான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் இந்த முறை பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com