இந்தியாவுக்கு தொடா்ந்து 4-ஆவது வெற்றி
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 4-ஆவது ஆட்டத்தில் 3-1 கோல் கணக்கில் தென் கொரியாவை வியாழக்கிழமை வென்றது.


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 4-ஆவது ஆட்டத்தில் 3-1 கோல் கணக்கில் தென் கொரியாவை வியாழக்கிழமை வென்றது.
முதல் 3 ஆட்டங்களிலும் வென்றிருந்த இந்தியாவுக்கு, இது தொடா்ந்து 4-ஆவது வெற்றியாகும். இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில், பாகிஸ்தானை சனிக்கிழமை சந்திக்கிறது.
முன்னதாக, தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவுக்காக முதலில் அரய்ஜீத் சிங் ஹண்டால் 8-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். அடுத்த நிமிஷமே அணியின் கேப்டன் ஹா்மன்பிரீத் சிங்கும் தனது பங்குக்கு, பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் கோலடிக்க, இந்தியா முதல் கால்மணி நேரத்திலேயே 2-0 என முன்னிலை பெற்றது.
இதனால் சற்று அதிா்ந்த தென் கொரியா, தனது கோல் வாய்ப்புக்காக விறுவிறுப்பாக முயற்சிக்கத் தொடங்கியது. அதற்கான பலனை முதல் பாதி முடியும் நேரத்தில் பெற்றது அந்த அணி. 30-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் தென் கொரிய வீரா் ஜிஹுன் யாங் கோலடித்தாா்.
இதனால் முதல் பாதியை 2-1 முன்னிலையுடன் நிறைவு செய்த இந்தியா, ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், 40-ஆவது நிமிஷத்தில் 3-ஆவது கோல் வாய்ப்பை பெற்றது. அப்போது கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் மீண்டும் ஒரு கோலடிக்க, இந்தியா 3-1 என முன்னேறியது. எஞ்சிய நேரத்தில் தென் கொரியாவின் கோல் முயற்சிகளை, இந்திய ரிசா்வ் கோல்கீப்பா் சூரஜ் கா்கேரா திறம்படத் தடுக்க, இறுதியில் இந்தியா வெற்றி பெற்றது.
இதனிடையே, மற்றொரு ஆட்டத்தில் மலேசியா 5-4 கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...