
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமூக வலைதளங்களில் 100 கோடி ஃபாலோயர்களைப் பெற்றுள்ளார்.
சமீபத்தில் தனது 900ஆவது கோலை அடித்து கால்பந்து வரலாற்றில் புதிய மைல்கல்லை தொட்டார். அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளங்களில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தி வருகிறார்.
சமீபத்தில் யுஆர் கிறிஸ்டியோனா என்ற பெயரில் ரொனால்டோ புதியதாக யூடியூப் சேனலை தொடங்கினார். 24 மணி நேரத்திற்குள் 10 மில்லியன் (1 கோடி) சப்ஸ்கிரைபர்களை பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிக்க: அதிரடி பேட்டிங்கின் ரகசியம் பகிர்ந்த டிராவிஸ் ஹெட்!
தற்போது, இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ், யூடியூப் என அனைத்ஹு சமூக ஊடகங்களிலும் சேர்த்து 1 பில்லியன் (100 கோடி) ஃபாலோயர்களை பெற்றுள்ளார் ரொனால்டோ.
இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனையை ரொனால்டோ நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.