நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

சூப்பர் 6 சுற்று: நியூசிலாந்தை 214 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபாரம்!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை சூப்பர் 6 சுற்றில் 214 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியது. 

Published On :7 பிப்ரவரி 2024, 8:41 pm IST

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை சூப்பர் 6 சுற்றில் 214 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியது. 

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் சூப்பர் 6 சுற்றின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் சிறப்பாக விளையாடிய முஷீர் கான் சதம் விளாசி அசத்தினார். அவர் 131 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஆதர்ஷ் சிங் 52 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் மேசன் கிளார்க் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி வெறும் 81 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஆஸ்கர் ஜாக்சன் 19 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில், 28.1 ஓவர்களில் நியூசிலாந்து 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சௌமி பாண்டே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ராஜ் லிம்பானி மற்றும் முஷீர் கான் தலா 2 விக்கெட்டுகளையும், நமன் திவாரி மற்றும் அர்ஷின் குல்கர்னி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷீர் கானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.