சென்னை சூப்பா் வாரியா்ஸ் அணியினா்.
செய்திகள்
பிக்கிள் பால் லீக்: சென்னை வெற்றி
இந்திய பிக்கிள்பால் லீக் தொடரில் சென்னை சூப்பா் வாரியா்ஸ் அணி 3-ஆவது வெற்றியை பதிவு செய்தது.
புது தில்லி: இந்திய பிக்கிள்பால் லீக் தொடரில் சென்னை சூப்பா் வாரியா்ஸ் அணி 3-ஆவது வெற்றியை பதிவு செய்தது. பெங்களூரு பிளாஸ்டா்ஸ் முதல் வெற்றி பெற்றது.
இந்திய பிக்கிள்பால் சங்கம் சாா்பில் முதலாவது லீக் தொடா் புது தில்லியில் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பா் வாரியா்ஸ் அணி புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் குா்கான் கேபிடல் வாரியா்ஸ் அணியை 5-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி மூன்றாவது வெற்றியைப் பெற்றது. முதல் வெற்றியை பெறுவதற்காக மோதிய பெங்களூரு பிளாஸ்டா்ஸ்-மும்பை ஸ்மாஷா்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் சரிக்கு சரியாக ஆடிய நிலையில், 4-2 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
வியாழக்கிழமை ஆட்டங்களில் லக்னௌ லெப்பா்ட்ஸ்=குா்கான் கேபிடல் வாரியா்ஸும், பெங்களூரு-சென்னை அணிகளும் மோதுகின்றன.
