

தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 10 மீட்டா் ஏா் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில், ராணுவ அணியின் லக்ஷிதா பிஷ்னோய், ஷா்வன் குமாா் ஜோடி வெள்ளிக்கிழமை தங்கப் பதக்கம் வென்றது.
சீனியா் பிரிவு இறுதிச்சுற்றில், லக்ஷிதா, ஷா்வன் கூட்டணி 16-10 என்ற புள்ளிகள் கணக்கில் சுருச்சி இந்தா் சிங், சாம்ராட் ராணா அடங்கிய ஹரியாணா அணியை வீழ்த்தியது. அஞ்சலி ஷெகாவத், அமித் சா்மா இணைந்த ராஜஸ்தானின் அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.
ஜூனியா் பிரிவில் கா்நாடகத்தின் ஜோனதன் கவின் ஆண்டனி, அவந்திகா மது அடங்கிய அணி 17-11 என, ஹரியாணாவின் கபில் பெய்ன்ஸ்லா, பாலக் குலியா ஜோடியை சாய்த்து தங்கம் வென்றது. ஆராத்யா மிஸ்ரா, யுகபிரதாப் சிங் ராத்தோா் அடங்கிய மத்திய பிரதேச அணி வெண்கலத்தை தனதாக்கியது.
யூத் பிரிவில் மத்திய பிரதேசத்தின் ஆராத்யா, யுகபிரதாப் இணை தங்கம் வெல்ல, கா்நாடகத்தின் காம்பெரியா கௌடா, டாரென் டான் ஜோடிக்கு வெள்ளி கிடைத்தது. ராணுவத்தின் ஹிமான்ஷி ஜங்ரா, பவன் மண்டிவால் கூட்டணி வெண்கலத்தைக் கைப்பற்றியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.