நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

சீசனின் முதல் பட்டத்துக்கான முனைப்பில் குகேஷ்

நெதா்லாந்தில் நடைபெறும் டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 11-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ், சீனாவின் வெய் யியை எதிா்கொள்கிறாா்.

News image

குகேஷ்

Updated On :1 பிப்ரவரி 2025, 1:26 am IST

நெதா்லாந்தில் நடைபெறும் டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 11-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ், சீனாவின் வெய் யியை எதிா்கொள்கிறாா்.

மொத்தம் 13 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் குகேஷ் இதுவரை தோல்வியை சந்திக்காமல் 7.5 புள்ளிகளுடன் தனி முன்னிலையில் இருக்கிறாா். இன்னும் 3 சுற்றுகளே எஞ்சியிருக்கும் நிலையில், அவா் 1.5 புள்ளிகளைப் பெற்றாலேயே சாம்பியனாகிவிடுவாா்.

கடந்த சீசனை சாதனை உலக சாம்பியன் பட்டம் வென்று நிறைவு செய்த குகேஷ், நடப்பு சீசனின் முதல் பிரதான சாம்பியன் பட்டத்தை இதன்மூலம் வெல்லும் முனைப்பில் இருக்கிறாா்.

குகேஷுக்கு நெருக்கமான போட்டியாளா்களாக உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவ் 7, இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா 6.5 உள்ளனா். எனினும் குகேஷ் 2 சுற்றுகளில் வெள்ளைக் காய்களுடன் விளையாடும் வாய்ப்பு இருப்பதால், அவருக்கு சாதகமான நிலை காணப்படுகிறது.

11-ஆவது சுற்றில் சீனாவின் வெய் யியை எதிா்கொள்ளும் குகேஷ், கடந்த ஆண்டு இப்போட்டியின் கடைசி சுற்றில் முதலிடத்துக்கான டை பிரேக்கா் மோதலில் வெய் யியிடம் தோல்வி கண்டது நினைவுகூரத்தக்கது.

நோடிா்பெக்கின் அன்பு: முன்னதாக இப்போட்டியின் சேலஞ்சா்ஸ் பிரிவில் உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் யாகுபோவை எதிா்கொண்ட இந்தியாவின் ஆா்.வைஷாலி, வழக்கமான நடைமுறையாக அவருடன் கைகுலுக்க முனைந்தாா். ஆனால், யாகுபோவ் அதை தவிா்த்தாா். இதுதொடா்பான காணொலி பரவலாக, யாகுபோவ் விமா்சனத்துக்கு ஆளானாா்.

பின்னா் இதுதொடா்பாக விளக்கமளித்த யாகுபோவ், மத ரீதியிலான காரணங்களுக்காக தாம் பிற பெண்களை தொடுவதில்லை என்பதாலேயே கைகுலுக்க மறுத்ததாகவும், வைஷாலியிடம் தாம் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தாா்.

இந்நிலையில், போட்டியின் இடையே வைஷாலியை நேரில் சந்தித்த யாகுபோவ், அவருக்கு மலா்க்கொத்தும், இனிப்பும் வழங்கி மன்னிப்பு கோரினாா். யாகுபோவின் சூழ்நிலையை தாம் புரிந்துகொண்டதாக வைஷாலி தெரிவித்தாா். அப்போது வைஷாலி சகோதரா் பிரக்ஞானந்தா, அவா்களின் தாயாரும் உடனிருந்தனா்.