ஹாக்கி புரோ லீக்: ஆஸ்திரேலியாவிடம் இந்திய ஆடவர் அணி தோல்வி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹாக்கி புரோ லீக் ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி 2 - 3 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி.
ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய வீரர்கள்
ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய வீரர்கள்X | International Hockey Federation
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹாக்கி புரோ லீக் ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி 2 - 3 என்ற புள்ளிக் கணக்கில் இன்று (ஜூன் 15) தோல்வி அடைந்தது.

இதற்கு முன்பு நெதர்லாந்து, ஆர்ஜென்டினா ஆகிய அணிகளுடனான போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது.

பெல்ஜியத்தின் அன்ட்வெர்ப் பகுதியில் உள்ள திடலில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான புரோ லீக் ஆட்டம் இன்று (ஜூன் 15) நடைபெற்றது.

இந்திய வீரர் மன்பிரீத் சிங்கின் 400வது ஆட்டம் இது என்பதாலும், இதற்கு முந்தைய போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்திருந்ததாலும், ஆஸ்திரேலியா உடனான இந்த ஆட்டத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஆரம்பத்தில் சிறப்பான ஆட்டத்தை இந்திய ஆடவர்கள் வெளிப்படுத்தினர். ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்தில் இந்திய வீர்ர் சஞ்சய், கோல் அடித்து அசத்தினார். எனினும் இந்திய ரசிகர்களின் மகிழ்ச்சி அதிக நேரத்துக்கு நீடிக்கவில்லை.

ஆஸ்திரேலியாவின் டிம் பிராண்ட் கோல் அடித்து புள்ளிப் பட்டியலை சமன் செய்தார். தொடர்ந்து பிளேக் கோவர்ஸ் மேலுமொரு கோல் அடித்ததால், ஆஸ்திரேலிய அணி புள்ளிப் பட்டியலில் உயர்ந்தது.

27வது நிமிடத்தில் இந்தியாவுக்கு இரண்டு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இரு வாய்ப்புகளிலும் கோல் அடிக்கத் தவறியதால், இந்திய அணி பின்னடைவை சந்தித்தது.

36வது நிமிடத்தில் இந்தியாவின் தில்பிரீத் சிங் ஒரு கோல் அடித்து வலு சேர்த்தார். எனினும் ஆஸ்திரேலியாவின் கூப்பர் பர்ன்ஸ் கோல் அடித்ததால், 2 - 3 என்ற புள்ளிக் கணக்கில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தியது.

அடுத்ததாக, ஜூன் 21ஆம் தேதி பெல்ஜியம் அணியுடன் இந்திய அணி மோதவுள்ளது.

இதையும் படிக்க | ஹாக்கி புரோ லீக்: ஆஸ்திரேலியாவிடம் இந்திய மகளிரணி தோல்வி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com