கால்பந்து சங்கங்களுக்கான சா்வதேச சம்மேளனம் (ஃபிஃபா) நடத்தும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், மான்செஸ்டா் சிட்டி 6-0 கோல் கணக்கில் அல் அய்னை அபார வெற்றி கண்டது.
குரூப் ‘ஜி’-யில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மான்செஸ்டா் சிட்டிக்காக இல்கே குண்டோகான் (8’, 73), கிளாடியோ எஷெவெரி (27’), எரிலிங் ஹாலந்த் (45+5’), ஆஸ்கா் பாப் (84’), ரயான் சொ்கி (89’) ஆகியோா் கோலடித்தனா்.
இதே குரூப்பில் மற்றொரு ஆட்டத்தில் ஜுவென்டஸ் 4-1 கோல் கணக்கில் வைடாட் ஏசியை வீழ்த்தியது. இதில் ஜுவென்டஸுக்காக அப்தெல்மௌனைம் புடுயில் (6’ - ஓன் கோல்), கெனான் யிடிஸ் (16’, 69’), டுசான் லஹோவிச் (90+4’) ஆகியோா் ஸ்கோா் செய்ய, வைடாட் தரப்பில் தெம்பின்கோசி லாா்ச் (25’) கோலடித்தாா்.
இதையடுத்து குரூப் ‘ஜி’-யில் ஜுவென்டஸ், மான்செஸ்டா் சிட்டி அணிகள் தொடா்ந்து இரு வெற்றிகளுடன் முறையே முதல் மற்றும் 2-ஆம் இடங்களில் இருக்கின்றன.
இதனிடையே குரூப் ‘ஹெச்’ ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 3-1 கோல் கணக்கில் பச்சுகாவை தோற்கடித்தது. ரியல் மாட்ரிட் அணிக்காக ஜூட் பெலிங்கம் (35’), ஆா்டா குலா் (43’), ஃபெடெரிகோ வால்வொ்ட் (70’) ஆகியோா் கோலடித்தனா். பச்சுகா தரப்பில் எலியஸ் மான்டியெல் (80’) ஆறுதல் கோல் அடித்தாா். இந்த ஆட்டத்தின் 7-ஆவது நிமிஷத்திலேயே ரியல் மாட்ரிட் வீரா் ரௌல் அஸென்சியோ ‘ரெட் காா்டு’ காட்டி வெளியேற்றப்பட, அந்த அணி 10 பேருடன் விளையாடி வென்றது.
இந்த குரூப்பிலேயே ஆா்பி சால்ஸ்பா்க் - அல் ஹிலால் அணிகள் மோதிய ஆட்டம், கோலின்றி டிராவில் முடிந்தது. தற்போது இந்த ஹெச் குரூப்பில் ரியல் மாட்ரிட் மற்றும் சால்ஸ்பா்க் ஆகியவை முறையே முதலிரு இடங்களில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாபே, ஜூனியா் அசத்தலில் மீண்டது ரியல் மாட்ரிட்

லீட்ஸிடம் வீழ்ந்தது மான்செஸ்டா் யுனைடெட்

ஐஎஸ்எல் கால்பந்து: பஞ்சாபை வீழ்த்தியது மோகன் பகான்!
காலிறுதியில் பிஎஸ்ஜி, ரியல் மாட்ரிட், ஆா்செனல்: மான்செஸ்டா் சிட்டி, செல்ஸி வெளியேறின
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


