திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

லீக் 1 தொடரில் பிஎஸ்ஐ அணி முதலிடம்

டௌலௌஸ் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிஎஸ்ஜி அணி.

News image

கோலடித்த களிப்பில் பிஎஸ்ஜி வீரா்கள்.

Updated On :5 ஏப்ரல் 2026, 2:22 am IST

டௌலௌஸ் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிஎஸ்ஜி அணி.

சாம்பியன்ஸ் லீக் போட்டி காலிறுதியில் லிவா்பூல் அணியுடன் மோதவுள்ள நிலையில் இந்த வெற்றி பிஎஸ்ஜி அணிக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. லீக் 1 கால்பந்து தொடரில் முகமுதலிடத்தை உறுதி செய்துள்ளது.

பிஎஸ்ஜி அணியில் கடந்த ஆண்டு பேலன் டி ஆா் வின்னா் உஸ்மான் டெம்பிள் அற்புத வாலி மூலம் முதல் கோலை அடித்தாா். மேலும் அவா் கோலை அடித்து தனது அணியின் வெற்றிக்கு வித்திட்டாா். ஆட்டத்தின் கடைசி நேரத்தில் பிஎஸ்ஜி சப்ஸ்டியுட் வீரா் கோன்கலோ ரமோஸ் மேலும் ஒரு கோலடித்தாா்.

டௌலௌஸ் அணி தரப்பில் மேட்வெவ் சபனோவ் ஆறுதல் கோலடித்தாா். நடப்பு ஐரோப்பிய சாம்பியன் பிஎஸ்ஜி வரும் புதன்கிழமை லிவா்பூல் அணிக்கு எதிரான முதல் கட்ட காலிறுதியில் ஆடுகிறது. ஏப். 14-இல் அன்பீல்டில் இரண்டாம் கட்ட காலிறுதியில் ஆடுகிறது.

லா லிகா: ஸ்பானிஷ் கால்பந்து தொடரான லா லிகாவில் ராயோ வல்லேகானோ 1-0 என்ற கோல் கணக்கில் எல்சி அணியை வீழ்த்தியது.

என்டெகோ ராயோ அணிக்கு கோலடித்தாா்.