தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

தங்கம் வென்றிருக்க வேண்டும்... இந்திய ஜூடோ வீராங்கனை யாமினி பேட்டி!

இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை இழந்த இந்திய வீராங்கனை யாமினி அளித்த பேட்டி குறித்து...

 Yamini Mourya

இந்திய வீராங்கனை யாமினி - படம்: எக்ஸ் / அமித் ஷா.

Published On :

இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை இழந்த இந்திய வீராங்கனை யாமினி அளித்த பேட்டியில், “நான் தங்கம் வென்றிருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் ஜூடோ 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை யாமினி மௌரியா (28 வயது) வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

மகளிர் ஜூடோ 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை யாமினி மௌரியா இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் அசெல்யா டோப்ரக் உடன் மோதினார்.

இதில் 6 நிமிஷங்கள் 54 நொடிகள் போராடிய யாமினி மௌரியா மூன்று முறை ஷிடோ பெனால்டியைப் பெற்றதால், எதிராளி வென்றதாக அறிவிக்கப்பட்டார்.

இருப்பினும் யாமினியின் உடல் தகுதி, தடுப்பாட்டம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. போட்டிக்குப் பிறகு யாமினி பேசியிருப்பதாவது:

நான் சிறிது வருத்தமாக இருக்கிறேன். நான் தங்கம் வெல்வேன் என நினைத்திருந்தேன். கடைசி நிமிஷம் வரை, நான் ஆக்ரோஷமாக விளையாடினேன்; எப்படியும் புள்ளிகளைப் பெறுவேன் என நினைத்தேன். எப்படியாயினும், இன்று நான் தோற்றுவிட்டேன். ஏனெனில், சில தவறுகளால் எனக்கு எதிராக பெனால்டியாக மாறியது.

முதலில் இந்த விருது எனது நாட்டுக்கும் எனது குடும்பத்திற்கும். அவர்கள் என்னை ஆதரக்கிறார்கள். அடுத்து ஆசிய போட்டிகளில் கவனம் செலுத்துகிறேன். அங்கு தங்கம் வெல்ல முயற்சிப்பேன். என் எல்லா முயற்சிகளையும் அளித்து தங்கத்தை வீட்டிற்கு கொண்டுவருவேன் என்றார்.

Summary

Commonwealth Games 2026: I felt I could win gold says judo indian women Yamini Mourya

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.