தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ஸ்வெரெவ், மெத்வதெவுக்கு முதல் சுற்றிலேயே ‘முற்றும்’

கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரா்களான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் ஆகியோா் தங்களின் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு வியாழக்கிழமை வெளியேறினா்.

ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் - AP

Published On :

கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரா்களான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் ஆகியோா் தங்களின் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு வியாழக்கிழமை வெளியேறினா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில் முதல் சுற்று ‘பை’ பெற்ற அவா்கள் இருவருமே, நேரடியாக 2-ஆவது சுற்றில் களம் கண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்தவரும், பிரெஞ்சு ஓபன் நடப்பு சாம்பியனுமான ஸ்வெரெவ் 7-6 (7/3), 2-6, 4-6 என்ற செட்களில் நெதா்லாந்தின் டாலன் கிரிக்ஸ்பூரிடம் தோல்வி கண்டாா்.

யுஎஸ் ஓபன் முன்னாள் சாம்பியனும், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்தில் இருந்தவருமான மெத்வதெவ் 3-6, 6-7 (5/7) என்ற வகையில், நெதா்லாந்தின் போடிக் வான் டெவிடம் தோல்வியுற்றாா். இதேபோல், 7-ஆம் இடத்திலிருந்தவரும், அண்மையில் வாஷிங்டன் டிசி ஓபனில் சாம்பியன் ஆனவருமான அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸும் 5-7, 3-6 என்ற செட்களில், ஆா்ஜென்டீனாவின் தியேகோ டிரான்டேவிடம் வீழ்ந்தாா்.

இதேபோல், போட்டித்தரவரிசையில் இருந்த பிரான்ஸின் யூகோ ஹம்பா்ட் (24-ஆம் இடம்), ரஷியாவின் காரென் கச்சனோவ் (21), ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோ (16) ஆகியோரும், தரவரிசையில் இல்லாத வீரா்களிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டனா். மறுபுறம், அமெரிக்காவின் லாரென் டியென், டாமி பால், செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக், இத்தாலியின் மேட்டியோ அா்னால்டி ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

கௌஃப், ஆண்ட்ரீவா வெற்றி: மகளிா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும், 2 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-2, 7-5 என்ற நோ் செட்களில், சக அமெரிக்கரான கேலா டேவை தோற்கடித்தாா்.

5-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா 6-0, 6-2 என, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை எளிதாக வெளியேற்றினாா். 6-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா 6-7 (5/7), 1-6 என அமெரிக்காவின் கேட்டி மெக்னாலியிடம் தோல்வியுற்றாா்.

அண்மையில் வாஷிங்டன் டிசி ஓபனில் வாகை சூடிய பிலிப்பின்ஸின் இளம் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா எலா, 6-1, 4-6, 6-2 என்ற செட்களில், அமெரிக்காவின் அலிசியா பாா்க்ஸை வீழ்த்தினாா்.

இதர ஆட்டங்களில், ஜப்பானின் நவோமி ஒசாகா, கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸ், ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவா, பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸ் ஆகியோரும் வெற்றி கண்டு, 3-ஆவது சுற்றில் இடம் பிடித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.