உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அரையிறுதிச் சுற்றின் முதல் போட்டியில் ஸ்பெயின் - பிரான்ஸ் அணிகள் மோதின. ஸ்பெயின் அணியின் அதிரடி ஆட்டத்தால் பிரான்ஸ் அணி 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
பிரான்ஸின் நட்சத்திர வீரரான எம்பாப்பே இந்தத் தோல்வி பற்றிப் பேசுகையில், ”மொத்தத் திறன் மற்றும் திட்டமிடலில், நாங்கள் விளையாட விரும்பிய ஆட்டத்தை, நாங்கள் விளையாடவில்லை என்றே நான் நினைக்கிறேன். உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் நீங்கள் செய்யவேண்டியதை செய்யத் தவறினால், வெற்றிபெற முடியாது.
மைதானத்தில் ஸ்பெயினை கட்டுப்பாடான ஆட்டத்திற்குள் நிலைபெற விடாமல் தடுத்து அழுத்தம் கொடுப்பதே எங்கள் நோக்கமாக இருந்தது. ஏனெனில், ஆட்டத்தைக் கட்டுப்படுத்தும் தடுப்பாட்டத்தில் அவர்கள் எங்களைவிடச் சிறப்பானவர்கள். அதைச் செய்வதில் நாங்கள் தோல்வியடைந்தோம்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், மைதானத்தின் நடுவே நிலவிய பிரச்னை பற்றியும் எம்பாப்பே துல்லியமாகச் சுட்டிக்காட்டினார். பிரான்ஸின் அட்ரியன் ராபியோ மற்றும் ஆரேலியன் சுவாமெனி நடுக்கள வீரர்களாக இருந்த நிலையில், ஸ்பெயினின் ரோட்ரி, டானி ஓல்மோ மற்றும் ஃபேபியன் ரூயிஸ் ஆகிய மூவர் கூட்டணியை அவர்களால் சமாளிக்க முடியவில்லை.
”நடுக்களத்தில் 3-க்கு 2 என்ற கணக்கில் நாங்கள் குறைவாக இருந்தோம். ஸ்பெயினுக்கு எதிராக அது முக்கியப் பிரச்னையாக இருந்தது. அனைத்தையும் மொத்தமாகச் சேர்த்து பார்க்கையில், அதன் முடிவு தோல்வியே. இது எங்களுக்கு பெரிய ஏமாற்றம்.
நானும் என் அணியினரும் எவ்வளவு ஏமாற்றம் அடைந்துள்ளோம் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதும், எங்கள் நாடு தொடர்ந்து முன்னேறவும், வரலாறு படைப்பதும் எங்கள் கனவாக இருந்தது. aஅனால், இப்போது நாம் இதனைத் தலை நிமிர்ந்து எதிர்கொள்ள வேண்டும். நீங்கள் வெற்றி பெற்றால் தலை நிமிர்வதைப் போல, தோற்கும்போதும் நிமிர்ந்தே இருக்கவேண்டும் என நான் நம்புகிறேன்.
சில சமயங்களில் இது இயந்திரத்தனமாகத் தோன்றினாலும் நாம் நம்மைத் தேற்றிக்கொண்டு, ஓய்வெடுத்துவிட்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். ஏனெனில், கால்பந்து யாருக்காவும் காத்திருக்காது. நாம் மீண்டும் புதிதாகத் தொடங்கி, தோல்வியைப் பின்னுக்குத் தள்ளி அதிலிருந்து பாடம் கற்கவேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
Summary
Spain is a better team than us in defense: Mbappé
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









