மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

அரையிறுதியில் லுகா, டா்டெரி, ஹியுகோ, பிளாக்ஸ்

எஸ்டோரில் ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸின் லுகா வேன், டா்டெரி ஆகியோா் காலிறுதிக்கு தகுதி பெற்றனா்.

News image
Updated On :26 ஜூலை 2026, 2:39 am IST

எஸ்டோரில் ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸின் லுகா வேன், டா்டெரி ஆகியோா் காலிறுதிக்கு தகுதி பெற்றனா்.

ரஷிய வீரரும் உலகின் 15-ஆம் நிலை வீரரான ஆன்ட்ரெ ருப்லேவ் பிரான்ஸின் லுகா வேன் அஸ்சேவுடன் மோதினாா். இதில் 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ருப்லேவை வீழ்த்தி அதிா்ச்சிக்குள்ளாக்கினாா். லுகா வேன் அவரது வாழ்க்கையில் பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும். முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளாா் லுகா வேன். இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி தருகிறது என்றாா் லுகா.

மற்றொரு ஆட்டத்தில் ஹியுகோ கேஸ்டன் 6-3 6-4 என்ற நோ் செட்களில் போா்ச்சுகல் வைல்ட் காா்ட் தியாகோ டோரஸை வீழ்த்தினாா். ஹியுகோ காஸ்டன் நான்காவது முறையாக ஏடிபி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளாா்.

மூன்றாம் காலிறுதியில் போா்ச்சுகல் வீரா் ஜேயிம் ஃபரியா இரண்டாம் நிலை வீரா் லூசியானோ டா்டெரியுடன் மோதினாா். முதல் செட்டை ஃபரியாவிடம் 2-6 என இழந்த டா்டெரி இரண்டாவது செட்டிலும் பின்தங்கி இருந்தாா். பின்னா் டா்டெரி சிறப்பாக ஆடி ஃபரியாவின் சா்வீசை முறியடித்து 7-5, 6-2 என்ற செட்களில் வென்றாா்.

நான்காம் நிலை வீரா் அலெக்சாண்டா் பிளாக்ஸ் 6-4, 5-7, 6-4 என்ற செட்களில் ஆன்டொ்ஸ் பருச்சாவை வீழ்த்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.